மாங்குளத்தில் தனியார் காணியில் ஒன்றில் குண்டுவெடிப்பு!


 முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் கற்குவாரி பகுதியில் குண்டு ஒன்று இன்று வெடித்துள்ளது.

தனியார் ஒருவருடைய காணியில் இருந்து குறித்த குண்டு எவ்வாறு வெடித்தது என்பது தொடர்பாக சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும் குறித்த குண்டு வெடிப்பு சம்பவத்தினால் எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவருகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.