சிறந்த துடுப்பாட்டதுடன் அவுஸ்திரேலியா களத்தில்!


 இந்தியா – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையே சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் ஒரு நாள் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்டத்தைத் தேர்ந்தெடுத்து ஆடி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. ஒருநாள், டி20, டெஸ்ட் என அடுத்தடுத்துத் திட்டமிடப்பட்டுள்ள இந்தத் தொடரில் முதலில் ஒரு நாள் தொடர் இன்று(27) நடக்கிறது.

இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு ஆரம்பித்த இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பாட்டத்தை தேர்ந்தெடுத்து ஆடி வருகிறது. தொடக்க வீரர்கள் வார்னர் மற்றும் பின்ச் என இருவரும் ஆரம்பத்தில் மெதுவாக, நிலையாக ஆடி இருவரும் அரைச்சதம் கடந்தனர். பின் ஓட்டம் சேர்ப்பில் வேகமெடுத்தனர்.

இந்திய அணியில் ஷமி மற்றும் பும்ரா தொடக்க ஓவர்களை வீசினர். இதில் ஷமி சிறப்பாக வீச, பும்ராவின் வேகம் துடுப்பாட்ட வீரர்களை மிரட்டினாலும் அவரால் ஓட்டங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது. பின் நவ்தீப் சைனி வீச வந்தார். அவர் பங்குக்கும் ஓட்டங் வழங்க அவுஸ்திரேலிய அணியின் புள்ளிகளை வேகமாக ஏற ஆரம்பித்தது.

அடுத்தடுத்து சஹல், ரவீந்திர ஜடேஜா என எந்த மாற்றமும் இதுவரை எடுபடவில்லை. தற்போதைய நிலவரப்படி 27 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 149 ரன்களை அவுஸ்திரேலியா சேர்த்துள்ளது. தொடக்க வீரர்கள் இருவருமே அரை சதம் கடந்துள்ளனர். வார்னர் 69 ரன்களில் ஆட்டம் இழக்க, பின்ச் ஆட்டமிழக்காமல் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டி வருகின்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.