ஆயிரக்கணக்கான கொரோனா மரணம் என குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரி!
இலங்கையில் கொரோனா மரணம் ஆயிரத்தை கடந்து விட்டதா என்ற சர்ச்சையை, கிளிநொச்சி மாவட்ட தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி ஏற்படுத்தியுள்ளார்.
ஏற்கனவே, யாழ் பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி புட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி, ஆயிரக்கணக்கான கொரோனா மரணம் நிகழ்ந்துள்ளதாக அறிக்கை சமர்ப்பித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் மாவீரர்தின அனுட்டிப்பிற்கு தடை கோரி கடந்த 19ஆம் திகதி பொலிசார் மனு தாக்கல் செய்திருந்தனர். கொரோனா அபாயமுள்ளதால், தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நினைவேந்தலை தடைசெய்ய கோரியிருந்தனர்.
கிளிநொச்சி மாவட்ட தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில், இதுவரை கொவிட்19 காரணமாக ஆயிரக் கணக்கானோர் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்துள்ளதாக சௌபாக்கிய அமைச்சின் ஜெனரல் தெரிவித்துள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஆயிரக் கணக்கானோர் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்துள்ளதாக“ என குறிப்பிடப்பட்ட வசனம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா நோயாளிகளை குறிப்பிட்டனரா, அல்லது தமிழ் அர்த்த பிழையுடன் எழுதினார்களா அல்லது உண்மை அதுதானா என நெட்டிசன்கள் சமூக வலைத்தளஙகளில் கேள்வியெழுப்பி வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை