முல்லைத்தீவில் விபத்தில் காயமடைந்த நிலையில் பெண்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்திற்கு முன்பாக இன்று காலை இடம்பெற்ற விபத்தில் குடும்பப் பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காலை வேளையில் மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு தனது பிள்ளையை கொண்டு வந்து இறக்கி விட்டு மீண்டும் வீடு செல்ல முற்பட்ட வேளையில் முள்ளியவளை பகுதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி வந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து மோதி விபத்துக்குள்ளாகி காயமடைந்த நிலையில் குறித்த நபர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்குச் சென்ற முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை