அமெரிக்காவில் கொரோனா அதிகரிப்பு - கலிபோர்னியாவில் ஊரடங்கு!


கொரோனா தொற்றின் அதிகரிப்பதைத் தடுக்கும் முயற்சியாக கலிபோர்னியா சனிக்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்த தீர்மானித்துள்ளது.

அமெரிக்கா முழுவதும், கொரோனா தொற்று காரணமாக நாளாந்த இறப்பு எண்ணிக்கை மே மதத்திற்கு பின்னர் முதல் முறையாக 2,000 ஐக் கடந்துவிட்டது.

ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தொகுத்த தரவுகளின்படி, நாட்டில் இப்போது 12 மில்லியனுக்கும் அதிகமான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 255,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.

இந்த எண்ணிக்கையே இதுவரை உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான இறப்பு எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட சமீபத்திய புள்ளிவிவரங்களில் நாடு முழுவதும் சுமார் 187,000 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்,

இந்நிலையில் தொற்றினை கட்டுபட்டுத்த பல மாநிலங்கள் புதிய முக்கவசங்களை அணிதல் போன்ற கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன.

இந்நிலையில் அதிகரித்த பரவல்களைத் தடுக்க நவம்பர் 26 ஆம் திகதி விடுமுறை பயணத்தை தவிர்க்குமாறு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அமெரிக்கர்களை வலியுறுத்தியுள்ளன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.