கடை நடத்தி வந்த இந்தியர் குத்தி கொலை!


 அமெரிக்காவின் ஜார்ஜியாவில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரை சேர்ந்த முகமது மொஹியூதின் என்ற 37 வயது இந்தியர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மளிகை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், அவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டு கிடந்துள்ளார். அவரது உடல் போலீசாரால் மீட்கப்பட்டு ஜார்ஜியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் வைக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி முகமதுவின் மனைவி மெஹ்னாஸ் பாத்திமா கூறும்பொழுது, எங்களுக்கு 10 மாத பெண் குழந்தை உள்ளது. கடந்த ஞாயிற்று கிழமை காலை 9 மணியளவில் அவரிடம் நான் பேசினேன். அரை மணிநேரம் கழித்து மீண்டும் நான் தொலைபேசியில் அழைக்கிறேன் என என்னிடம் அவர் கூறினார்.

ஆனால் அதன்பின்னர் அவரிடம் இருந்து அழைப்பு வரவே இல்லை. பின்பு எனது உறவினர் வழியே, எனது கணவர் அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார் என்ற விவரம் தெரிய வந்தது.

அவரது உடல் ஜார்ஜியா மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் அவருக்கு குடும்ப உறுப்பினர்கள் என வேறு யாரும் இல்லை.

நானும், எனது தந்தையும் அமெரிக்கா செல்ல அவசரகால விசாவுக்கு அரசு ஏற்பாடுகள் செய்து தரவேண்டும் என வேண்டுகோளாக கேட்டு கொள்கிறேன். ஏனெனில் அதன்பின்பே அமெரிக்காவில் அவரது இறுதி சடங்குகளை நாங்கள் மேற்கொள்ள முடியும் என கூறியுள்ளார்.

Blogger இயக்குவது.