குழந்தைக்கு தீ வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்!


 தமிழகத்தில் கணவர் சொன்ன ஒரு வார்த்தைக்காக 20 வயது இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதுடன், தன்னுடன் சேர்ந்து நான்கு மாதம் குழந்தையும் கொலை செய்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இருக்கும் மேல்முடிமன்னார் கோட்டை பகுதியை சேர்ந்தவர் பொன்முருகன்(27). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க குருதேவி என்பவருடன் கடந்த ஆண்டு திருமணம் ஆகியுள்ளது.

இந்த தம்பதிக்கு நான்கு மாத ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை, பொன்முருகன் வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட, குருதேவியின் பெற்றோரும் வெளியில் சென்றுவிட, வீட்டில் தனியாக இருந்த குருதேவி திடீரென குழந்தையின் மீதும் தன் மீதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீயை வைத்து பற்ற வைத்து கொண்டார்.

உடம்பெல்லாம் தீ பரவி, குழந்தையும், குருதேவியும் அலறிய சத்தம் கேட்டு ஓடி வருவதற்குள் இரண்டு பேரும் தீயில் கருகி இறந்த நிலையில் கிடந்துள்ளனர்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்க, விரைந்து வந்த பொலிசார் உடல்களை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

அதன் பின் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், சம்பவ தினத்தன்று காலையில் பொன்முருகன் வேலைக்கு கிளம்பும்போது, மதிய சாப்பாட்டை சீக்கிரமா ரெடி பண்ணு என்று சொல்லியியுள்ளார். இதை அவர் சற்று வேறுவிதமாக கோபத்துடன் கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனை அடைந்த அவர் குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். திருமணம் முடிந்து ஒரு வருடமே ஆன நிலையில், வேறு ஏதும் காரணம் இருக்குமா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.