மாவட்டம், மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை செய்யப்படுமா?


மாவட்டங்களுக்கும் மற்றும் மாகாணங்களுக்கும் இடையிலான போக்குவரத்தை அடுத்த வாரத்திற்குள் தடை செய்வது குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்துவதாக அரசு வட்டாரங்களை மேற்கோளிட்டு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடிய பின்னர் முடிவு எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் சுமார் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என்று இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறுகிறார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியின்றி தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பயணம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

மேல் மாகாணம் உள்ளிட்ட சில இடங்களில் விதிக்கப்பட்டு இருந்த ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டாலும் 25 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.