கோரனாவால் மூவரின் மரணம் வீட்டிலே நடந்தது!


 கொரோனா வைரஸ் காரணமாக இன்று உயிரிழந்த 5 பேரில் மூவர் தங்களது வீடுகளில் வைத்தே மரணமடைந்துள்ளனர் என்று அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கிரான்ட்பாஸ் பகுதியை சேர்ந்த 83 வயது பெண் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். இவருக்கு நீரிழிவு, இரத்த அழுத்தம் ஆகிய நோய்கள் இருந்துள்ளன.

சிலாபம் பகுதியை சேர்ந்த 68 வயது ஆண் கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் வைத்து உயிரிழந்துள்ளார்.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் பல நோய்கள் இவருக்கு இருந்துள்ளன.

இரத்மலான பகுதியை சேர்ந்த 69 வயது ஆண், இருதய நோய் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளார். பரிசோதனையில் அவருக்கு தொற்று ஏற்பட்டமை உறுதியாகியது.

கொழும்பு கொட்டாஞ்சேனையை சேர்ந்த 78 வயது ஆண் நபர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.இவருக்கும் இருதய நோய் காணப்பட்டது.

கொழும்பு கொட்டாஞ்சேனையை சேர்ந்த 64 வயது ஆண் நபர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.இவருக்கு ஆஸ்துமா நோய் இருந்தது.

Blogger இயக்குவது.