காரைநகர் இந்து கல்லூரி மூடல்!


 காரைநகர் இந்துக் கல்லூரி 3 நாட்கள் மூடுப்படுவதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், எல். இளங்கோவன் அறிவித்துள்ளார்.

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் ஆலோசனைக்கு அமைய நாளை (30) தொடக்கம் வரும் புதன்கிழமை வரை 3 நாட்களுக்கு காரைநகர் இந்துக் கல்லூரி மூடப்படுகிறது.

காரைநகரில் கொரோனா தொற்று உள்ள ஒருவர் கண்டறியப்பட்ட நிலையில் அவருடன் நெருக்கமாகப் பழகியதாக கருதப்படும் ஆசிரியர் ஒருவர், காரைநகர் இந்துக் கல்லூரியில் கற்பிக்கின்றார். அவர் கடந்த வாரம் பாடசாலைக்குச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் அவரது பிசிஆர் பரிசோதனை வரும் புதன்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது. அன்று அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்தால் மறுநாள் வியாழக்கிழமை பாடசாலை ஆரம்பிக்கப்படும் என்று வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

Blogger இயக்குவது.