புதுக் கட்சி தொடங்கினார் அனுஷா சந்திரசேகரன்!
மலையக அரசியலுக்கு புது இரத்தம் பாய்ச்சும் நோக்கில் மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவரும் மறைந்த முன்னாள் எம்பியுமான பெ.சந்திரசேகரன் எம்பியின் மகளும் மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் பிரதி செயலாளருமான அனுஷா சந்திரசேகரன் புதுக் கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணி என்ற தொழில் சங்கத்தையும் சந்திரசேகரன் மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சியையும் பதிவு செய்து தனது புதிய கட்சி பணியை ஆரம்பிக்க உள்ளதாக அனுஷா நேற்று(28) தெரிவித்துள்ளார்.
மேலும்,
“என் தந்தை வழியில் எனக்கு அரசியல் அங்கீகாரம் வழங்கிய 17 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை அடுத்தகட்ட சமூக செயல்பாடுகளுக்கான அடித்தளமாக அமைத்துக்கொண்டு மக்களுடன் இணைந்து பயணிப்பேன்.
ஆரோக்கியமான முற்போக்கான தூய நோக்குடைய அனைத்து சக்திகளின் ஆதரவுடன் நிச்சயமாக புதிய அரசியல் தொழிற்சங்க கலாசாரத்தை உருவாக்கும் மக்கள் சக்தியுடனான வெற்றியை என் தந்தைக்கு சமர்ப்பிப்பேன்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை