விசுவமடுவில் வயலில் வேலை செய்த குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்!

 



முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு இளங்கோபுரத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 41 அகவையுடைய மாரிமுத்து சுதாகரன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவார்

11.11.2020 அன்று காலை வயலில் வரம்பு வெட்டிக்கொண்டிருந்தவேளை இவர் வயலில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு சென்ற புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணை நடத்திவருவதுடன் பிரேத பரிசோதனைக்காக சடலம் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.