கல்வி தொடர்பாக நாமல் ராஜபஷ அதிரடி முடிவு!

 


உலகளாவிய கொரோனா தொற்றுக்கு மத்தியில் நாடு மேலும் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்படுவதை தடுத்து, நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்வதற்கு நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்படும் கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டத்தின் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு குழுவினால் மாத்தளை மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் பங்கேற்புடன் வரலாற்று சிறப்புமிக்க மாத்தளை மாவட்டத்தின் அபிவிருத்தி குறித்த கலந்துரையாடல் நேற்று முன்தினம் (15) மாத்தளை சுற்றுலா மேம்பாட்டு வளாக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அனைத்து அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சுக்கள் இணைந்து நிறுவிய புதிய பொறிமுறை ஊடாக நேரடியாக கிராமங்களுக்கு வளங்கள் பகிரப்படும் வேலைத்திட்டமொன்றை தயாரித்தல், எதிர்காலத்தில் மாவட்டத்திற்கென ஆரம்பிக்க திட்டமிடப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்வைத்தல் போன்ற அடுத்த ஆண்டு வரவு செலவுதிட்த்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை கிராமத்தின் அபிவிருத்தியில் நேரடியாக ஈடுபடுத்துவதற்கு மாவட்ட மட்டத்தில் யோசனைகளை பெற்றுக் கொள்வதும் இந்த வேலைத்திட்டத்தின்; ஊடாக முன்னெடுக்கப்படுகின்றது.

கல்வி

  • முதலாவது கட்டமாக மாத்தளை மாவட்டத்திற்கு ரூபாய் 600 மில்லியன் செலவில் 06 தேசிய பாடசாலைகளை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
  • மாத்தளை மாவட்டத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய 113 பட்டதாரி பயிற்சியாளர்கள் மற்றும் உயர் டிப்ளோமா கல்வியை நிறைவுசெய்த ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • அதன்படி, 2021 முதல் காலாண்டில் ஆசிரியர் பற்றாக்குறைக்கு முழுமையான தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
  • எதிர்காலத்தில் ஆசிரியர் நியமனங்களின் போது பாடசாலைகளை அண்மித்து வசிக்கும் ஆசிரியர்களை அண்மித்த பாடசாலைகளுக்கு நியமிப்பது குறித்து கவனம் செலுத்தப்படும்.
  • மாத்தளை மாவட்டத்தில் உயர் தொழில்நுட்ப பல்கலைக்கழகமொன்றை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் ஜனவரி மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
  • மாத்தளை மாவட்டத்தில் ஆசிரியர் உதவியாளர்களை நிரந்தரமாக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்வது குறித்து இந்த மேம்பாட்டுக் குழுவில் முன்மொழியப்பட்டது.

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, முன்பள்ளி மற்றும் ஆரம்ப கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் கல்வி சேவைகள்

  • வரலாற்றில் முதல்முறையாக, முன்பள்ளிகளுக்கு பொறுப்பான அமைச்சர் ஒருவரை நியமித்ததன் மூலம் இந்த துறையின் வளர்ச்சி பணிகளை வெற்றிகரமாக்கியுள்ளது. முறைசாரா முன்பள்ளி கலாசாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு தேசிய கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு, பாடசாலை விளையாட்டு மற்றும் கிராமப்புற விளையாட்டுகளின் வளர்ச்சி

  • அகுரம்பொடா மத்திய மகா வித்தியாலயம் (விளையாட்டு பாடசாலை) முதல் கட்டத்தை ரூ 7.7 மில்லியன் செலவில் அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது இவ்வாண்டின் இறுதியில் பூர்த்திசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
  • மாத்தளை மாவட்டத்தில் 11 பிரதேச செயலக பிரிவுகளில் 55 பாடசாலைகளில் விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
  • ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவிலும் ஒரு விளையாட்டு மைதானம் எனும் அடிப்படையில் 11 விளையாட்டு மைதானங்களை நவீனமயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
  • ரூபாய் 50 மில்லியன் செலவில் மாத்தளை ஹொக்கி மைதானத்தை சர்வதேச அளவிலான அரங்கமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
  • மாத்தளை மாவட்டத்தில் 30 வெளிப்புற உடற்பயிற்சி மையங்கள் நிறுவப்படும்.

உள்ளூராட்சி நிர்வாகம்

  • ரூபாய் 300 மில்லியன் செலவில் மாத்தளையில் ஒரு முழுமையான தீயணைப்பு நிலையத்தை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்.

குறித்த சந்தர்ப்பத்தில் மாத்தளை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பிரமித்த பண்டார தென்னகோன், ஜனக பண்டார தென்னகோன், நாலக பண்டார கோட்டேகொட, சிசிர ஜயகொடி, லசந்த அழகியவன்ன,விதுர விக்ரமநாயக்க, விஜித பேருகொட, ரோஹண திசாநாயக்க ஆகியோர், ஆளுநர் லலித் யூ. கமகே, மாவட்ட செயலாளர் எஸ்.எஎம்.ஜி.கே.பெரேரா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.