டிப்பர் பின்னால் மோதிய முச்சக்கரவண்டி!
கிளிநொச்சி கல்வி திணைக்களத்திற்கு முன்பாக இன்று இரவு 7 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
வீதியில் பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனம் சடுதியாக பிறேக் அடித்தமையினால் பின்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோ டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை