ஆபாச புகைப்படத்தை ஆசிரியைக்கு அனுப்பிய இளைஞனுக்கு நேர்ந்த கதி!


 பாடசாலை மாணவியின் புகைப்படங்களை நிர்வாண புகைப்படங்களுடன் இணைத்து, மாணவியின் பாடசாலை ஆசிரியர்களிற்கு அனுப்பிய இளைஞனை தம்புள்ள பொலிசார் கைது செய்துள்ளனர்.

மஹியங்கன பகுதியில் வசிக்கும் 27 வயது இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார்.

தம்புள்ள பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவில் 20 வயதான மாணவி அளித்த முறைப்பாட்டையடுத்து, இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறிப்பிட்ட மாணவியும், கைதான இளைஞனும் காதல் தொடர்பில் இருந்துள்ளனர். எனினும், பின்னர் இளைஞனுடனான தொடர்பை மாணவி துண்டித்துள்ளார். இளைஞனின் தொலைபேசி அழைப்புக்களிற்கும் பதிலளிப்பதை தவிர்த்து வந்துள்ளார்.

இதையடுத்து ஆத்திரமடைந்த இளைஞன், மாணவியின் புகைப்படங்களை, நிர்வாண புகைப்படங்களுடன் இணைத்து, மாணவிக்கு கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரிற்கு வட்ஸ்அப் மூலம் அனுப்பியிருந்தார்.

மாணவியின் புகைப்படத்தையடுத்து இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை தம்புள்ள பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.