விசித்திர தண்டனையை அமுல்படுத்தும் வடகொரிய அதிபர்!

 


உணவு மற்றும் உணவுப் பொருளை வீணடித்தால் கடும் தண்டனை வழங்கப்படும் என வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் எச்சரித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் காரணமாகவே அந்நாட்டு அதிபர் இதனை தெரிவித்துள்ளதாக அதிபர் மாளிகை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவை வீணடிப்பது பொருளாதாரத்தை வீணடிப்பதற்குச் சமம் என்றும், எந்த நிகழ்வில் எந்த வகையான உணவை உட்கொள்ள வேண்டும் என்றும் பட்டியலிடப்பட்டுள்ளது.

வடகொரியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட புயல்கள் மற்றும் கொரோனா தாக்கம், பொருளாதாரத் தடை போன்ற காரணங்களால் அங்கு கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.