சபரிமலையில் 39 பேருக்கு கொரோனா!


 சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டதிலிருந்து பக்தர்கள், பொலிஸார் மற்றும் கோயில் ஊழியர்கள் உட்பட இதுவரை 39 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக கடந்த16ஆம் திகதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.

அந்நிலையில் தொற்று பாதித்த 39 பேரில் 27 பேர் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் ஆவர். அவர்கள் உடனடியாக கொரோனா சிகிச்சை மையங்களுக்கு மாற்றப்பட்டனர்.

கொரோனா வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்கும் அடிப்படை முகாம்களில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக கோயிலுக்கு வருபவர்களுக்கு கொரோனா சோதனை பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட பிறகே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

அதையடுத்து சோதனை நடைமுறைகள் மேலும் கடுமையாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.