சவேந்திரசில்வா வெளியிட்டுள்ள அறிவிப்பு!


 தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பல இடங்களில் எதிர்வரும் திங்கட்கிழமை தனிமைப்படுத்தல் நீக்கப்படும் என  இனப்படுகொளையாளி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தேவை ஏற்பட்டால் இந்த இடங்களில் தனிமைப்படுத்தலை நீடிப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் சகாக்கள் குறித்து புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே பல இடங்களை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.


பெருமளவு நோயாளர்கள் உள்ள பகுதிகள் அடையாளம் காணப்பட்டு அதன் அடிப்படையில் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன என  தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய சேவைகளில் உள்ளவர்களுக்கும் மருந்து உணவு விநியோகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இந்த பகுதிகளில் நடமாடுவதற்கான அனுமதி வழங்கப்படும் என  தெரிவித்துள்ளார்.


இதேவேளை, இலங்கையில் தற்போது கொரோனா தொற்றின் பரவல் மிக வேகமாக இருக்கின்றது. கொரோனா தொற்று காரணமாக இதுவரையில் 36 பேர் பேர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், இலங்கையில் மொத்த கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 14285ஆக உயர்ந்துள்ளது. இன்று மாத்திரம் 356 கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், 5370 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 8880 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.