பிரான்ஸில் தீவிரமாக பரவும் கொரோனா!


 பிரான்ஸில் பாடசாலைகள், கல்லூரிகள், உயர் கல்வி நிலையங்கள் என அனைத்திலும், மிக விரைவாகக் கொரோனாத் தொற்று பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை, அமைச்சர்களின் பத்திரிகையாளர் சந்திப்பில், கல்வி வட்டாரங்களில், 12 ஆயிரத்து 487 பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவித்திருந்தனர்.

12 மில்லியன் மாணவர்களில் இது ஒரு சதவீதமாக இருந்தாலும், கல்வி அமைச்சர் ஜோன்-மிசேல் புளேங்கே வெளியிட்ட புள்ளிவிபரத்தினால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் கல்வியமைச்சர் தன் வாயினால், மூவாயிரத்து 528 பேரிற்கு மட்டுமே தொற்று உள்ளதாக அறிவித்திருந்தார்.

இந்தநிலையில், ஒரு வாரத்திற்குள் இது, 400 வீதமாக உயர்ந்து, 12.487 மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புள்ளிவிபரங்கள் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரான்ஸில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில், ஒரு மாத காலத்திற்கு நெகிழ்வுத் தன்மையுடன் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.