குளத்துக்குள் கவிழ்ந்த பஸ்!

 நாடாளுமன்ற ஊழியர்களை ஏற்றிச் செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து குளத்தில் கவிழ்ந்துள்ளது.

நிலவும் மழை காரணமாக நாடாளுமன்ற ஊழியர்களை அழைத்துச் செல்ல பஸ் நேற்று இரவு நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டதாகவும், ஊழியர்களை அழைத்துக்கொண்டு திரும்பும் போது இந்த சம்பவம் நடந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் நடந்த நேரத்தில் பேருந்தில் 30-35 நாடாளுமன்ற அதிகாரிகள் இருந்ததாகவும், அவர்களில் பலருக்கு காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் குறித்து பொலிஸ் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

மேலும் பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்

Blogger இயக்குவது.