தனக்கு தொற்றுள்ளதை உறுதிப்படுத்திக் கொண்ட இளைஞன்!


 கொழும்பிலிருந்து தீபாவளி பண்டிகைக்கு பொகவந்தவைக்குவந்த இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

குறித்த இளைஞன் தானாக முன்வந்து பொகவந்தலா சுகாதார காரியாலயத்திற்கு சென்று பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டுள்ள நிலையில் இன்று கிடைத்த மருத்துவ அறிக்கையிலே அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

கொழும்பு , வெள்ளவத்தை பொலிதீன் கடையொன்றில் வேலை செய்த இவர் கடந்த 10ஆம் திகதி கொழும்பிலிருந்து இ.போ.ச பஸ்ஸில் ஹட்டன் வந்து ஹட்டனிலிருந்து தனியார் பஸ்ஸொன்றில் பொகவந்தலா சென்று அங்கிருந்து முச்சக்கரவண்டியில் வீட்டிற்கு சென்றுள்ளார் .

பொகவந்தலா மேல்பிரிவை சேர்ந்த இவர் தீபாவளி பண்டிகையை நண்பர்கள் உறவினர்களுடன் கொண்டாடியுள்ளமை தெரிவந்துள்ளது.

தொற்றுக்குள்ளான 19 வயதுடைய குறித்த இளைஞனை பொகவந்தலா தோட்ட வைத்தியசாலையில் தற்காலிகமாக தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அவருடன் தொடர்பை பேணிவர்களின் தகவல்கள் பெற்று அவர்களையும் சுயதனிப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொகவந்தலா பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

Blogger இயக்குவது.