திருமலை மலைப்பாதையில் மின்சார பேருந்தை இயக்கி வெள்ளோட்டம்!!
திருமலை மலைப்பாதையில் மின்சார பேருந்தை இயக்கி தேவஸ்தான நிர்வாகம் சோதனை ஓட்டம் நடத்தி வருகின்றது.
ஆந்திர மாநிலம்- திருப்பதி திருமலையில், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுப்பதற்கு மின்சார பேருந்துகளை இயக்க, தேவஸ்தான நிர்வாகம் தீர்மானம் மேற்கொண்டது.
இதற்கமைய, ஆந்திர மாநிலசாலை போக்குவரத்து கழகம், திருமலைக்கு இயக்கப்படும் டீசல் பேருந்துகளை மின்சார பேருந்துகளாக மாற்றி பயன்படுத்த திட்டமிட்டது.
அந்தவகையில் கர்நாடக மாநிலம், பெங்களூரிலுள்ள ஒரு நிறுவனத்திடம், போக்குவரத்து கழக அதிகாரிகள், ஆறு மாதத்துக்கு முன், சில பழைய பேருந்துகளை ஒப்படைத்தனர். அதில் ஒரு பேருந்து திருப்பதிக்கு அண்மையில் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மலைப்பாதையில் இந்த பேருந்தை இயக்கி, சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பேருந்தில் டீசல் டேங்கிற்கு பதிலாக, மின் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனை இரண்டு மணி நேரம் ‘சார்ஜ்’ செய்தால், 160 கி.மீ பயணிக்க முடியும்.
குறித்த பேருந்து சோதனை ஓட்டம் வெற்றி பெற்றால், விரைவில் மலைப்பாதையில் இந்த பேருந்துகளை இயக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை