நாப்கின் வரி அதிகரிப்பு!


 அனைத்து வயதினருக்குமான நாப்கின் (சுகாதார அணையாடை) வரியை 2021ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 15% ஆக உயர்த்தும் முன்மொழிவுக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ள, எதிர்கட்சி எம்பி ரோஹினி கவிரத்ன, இந்த அரசாங்கம் பெண்களின் மாதவிடாய் மூலம் சம்பாதிக்க முயற்சிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இன்று (24) நாடாளுமன்றில் உரையாற்றும் போது இதனை தெரிவித்தார். மேலும்,

“உலகின் வளர்ந்த நாடுகளில் மாணவர்கள் மற்றும் ஏழைக் குழந்தைகளுக்கு இலவச சுகாதார நாப்கின்கள் வழங்கும் சூழலில், இந்த அரசாங்கம் பணக்காரர்களின் வரிகளை குறைத்து, மக்களின் அத்தியாவசிய பொருட்களுக்கு வரி விதிக்கிறது.

கடந்த அரசாங்கம் நாப்கின்களுக்கு 40% வரியை நீக்கி நிவாரணமளித்தது. ஆனால் இந்த அரசாங்கம் 15% வரியை அதிகரித்து, மக்களை மீது அக்கறையற்ற பேயரசாக மாறி வருகின்றது.

இந்த வரியால் பெண்கள் மட்டுமல்ல, தாய், மகள் உட்பட ஒவ்வொரு குடும்பங்களும், சிறுவர்களும் பாதிக்கப்படுவார்கள். ஒவ்வொரு மாதமும் அத்தியாவசிய பட்டியலில் நாப்கின்கள் சேர்க்கப்படுகின்றது. நாட்டில் வறுமை காரணமாக நாப்கின்கள் இல்லாததால் பருவமடைந்த பின்னர் பாடசாலைகளுக்கு செல்லாத சிறுவர்கள் இருக்கின்றனர்” – என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.