டிப்பரால் மோதப்பட்டு பொலிஸ் அதிகாரி கொலை!
குருநாகல் – கொபெய்கனே பகுதியில் இன்று (29) அதிகாலை கள்ள மணல் டிப்பரின் சாரதி ஒருவர் தனது டிப்பரால் பொலிஸ் அதிகாரியை வேண்டுயென்றே மோதிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆற்றுப்பகுதி ஒன்றில் கள்ள மாணல் அகழப்படுவதாக கிடைத்த தகவல் தொடர்பில் ஐவர் கொண்ட பொலிஸ் குழு விசாரணை செய்ய சென்ற போது மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் தனது டிப்பரை ஓட்டி சென்று பொலிஸ் அதிகாரி மீது மோதயுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட இரு பிள்ளைகளின் தந்தையான 32 வயதுடைய பொலிஸார் அதிகாரி மரணமடைந்துள்ளார்.
இந்நிலையில் மறைந்திருந்த குறித்த டிப்பரின் சாரதி இன்று காலை நிக்கவரட்டியவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை