கிரிக்கெட் ஆட்டத்தின் போது காதலை சொன்ன இந்தியர்!


 இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது பார்வையாளர் அரங்கில் நடந்த காதல் சம்பவம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

போட்டியை காண்பதற்காக வந்த ஜோடி ஒன்றை நோக்கி கமராக்கள் திரும்பியதும் இந்தியரான இளைஞர் எழுந்து நின்று தன்னுடன் வந்த பெண்ணை பார்த்து, அந்த பெண்ணிற்கு முன் முட்டி போட்டு தனது காதலை தெரிவித்தார்.

தான் கொண்டு வந்திருத்த மோதிரத்தை காட்டி அந்த பெண்ணிடம் காதலை தெரிவித்தார். இதை பார்த்ததும் உற்சாகமடைந்த அவுஸ்திரேலியரான பெண், காதலை ஏற்று இந்திய இளைஞரை கட்டிப்பிடித்து முத்தமிட்டார்.

இதன்போது மக்ஸ்வெல் உற்சாகத்தில் கைதட்டி அந்த காதல் ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.