‘வலிமை’ படப்பிடிப்பில் விபத்து; நடந்தது என்ன?


 ‘வலிமை’ படப்பிடிப்பில் அஜித்துக்கு எப்படி விபத்து ஏற்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. சில முக்கியமான சண்டைக் காட்சிகளை இந்தியாவின் ஹைதராபாத்தில் படமாக்கி விட்டுத் திரும்பியுள்ளது படக்குழு. இதில் அஜித்துக்குக் காயம் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இதனைப் படக்குழு தரப்பிலும் உறுதிப்படுத்தினார்கள்.

தற்போது, முதன்முறையாக ‘வலிமை’ படத்தில் அஜித்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. யார் வெளியிட்டார்கள் என்ற விவரம் தெரியவில்லை. இதில் அஜித் மோட்டார் சைக்கிளை வீலிங் செய்கிறார். இவ்வாறு வீலிங் செய்யும்போது தவறி கீழே விழுந்து அஜித்துக்குக் கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

‘வலிமை’ படப்பிடிப்பில் அஜித் வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிக்கொண்டு வந்து, வீலிங் செய்து மீண்டும் சமநிலைக்கு வரவேண்டும். இதுதான் காட்சி. அப்படிச் செய்யும்போது தவறி கீழே விழுந்துவிட்டார் அஜித். மோட்டார் சைக்கிள் தனியாகப் போய் விழுந்துவிட்டது.

அஜித்துக்குக் கையில் நல்ல காயம். மேலும் சில சிராய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் அஜித்தோ பெரிய அடியெல்லாம் ஒன்றுமில்லை என்று சில மணித்துளிகளில் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். மேலும், இதே பைக் வீலிங் காட்சியை அடுத்த நாள் காலையில் படமாக்கியுள்ளனர். அப்போது அதே வீலிங் காட்சியில் நடித்துப் படக்குழுவினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.