ஆட்டையை போட்ட தாய், மகள், காதலன் CCTV இல் சிக்கினர்!


 வவுனியாவில் அமைந்துள்ள பிரபல நகை கடை ஒன்றில் இருந்து நான்கு இலட்சம் பெறுமதியான நகைகளை சூட்சுமமான முறையில் திருடிய மூன்று திருடர்களை கைது செய்துள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி தெரியவருவதாவது,

வவுனியாவில் அமைந்துள்ள பிரபல நகை கடையில் கடந்த 13.11.2020 அன்று நகை வாங்குவதற்காக தாய், மகள் மற்றும் மகளின் காதலன் ஆகியோர் சென்றுள்ளனர். இதன் போது கடை ஊழியரினால் அவர்கள் கேட்கும் நகைகளை காட்டியுள்ளார். இவ்வாறு பல நகைகளை பார்த்த குறித்த திருடர்கள் கடை ஊழியர் சற்றே அசந்த நேரத்தில் குறிப்பிட்ட நகைகளை எடுத்துள்ளர். பின்னர் தமக்கு பிடித்தமாதிரி நகை இல்லை என தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளர்.

13.11.2020 மாலை நகைகளின் இருப்பு எடுக்கும் பொழுது குறிப்பிட்ட சில நகைகள் இல்லாமையினால் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானவடு வழிகாட்டலின் கீழ் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி அழகைய்யவன்ன தலைமையில் உபபொலிஸ் அதிகாரி பிரனீத் திசானாயக்க, பொலிஸ் சார்ஜன்ட்களான ரஞ்சித் (14651), சந்தன (45769), நிசாந்த (19000), திசானாயக்க (37348), பொலிஸ் கொன்ஸ்தாபள் குமார (72287), பெண் பொலிஸ் கொன்ஸ்தாபள் மது (9928) ஆகிய குழுவினரால் அம்பாந்தோட்டை மற்றும் கலாவ பகுதியை சேர்ந்த தாய், மகள் மற்றும் மகளின் காதலன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட முதற் கட்ட விசாரணையின் போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இவ்வாறான திருட்டுக்களை மேற்கொண்டிருந்ததுடன் திருடப்பட்ட நகைகளை அடகு வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.