வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 316 பேர் பூரண குணம்!!

 


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 316 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


அதன்படி, கொ​ரோனா வைரஸ் தொற்றில் இருந்து இதுவரையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 903 ஆக அதிகரித்துள்ளது.


இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 5 ஆயிரத்து 430 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.


இலங்கையில் இதுவரையில், 18 ஆயிரத்த 402 பேருக்கு கொரோனா வைரஸ்  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இந்த தொற்றுக்கு உள்ளான 69 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


Blogger இயக்குவது.