கொரோனா தொற்றினால் மேலும் 5 மரணங்கள் பதிவு – முழுமையான விபரம்!!

 


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 5 மரணங்கள் பதிவாகிய நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.


அதற்கமைய கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 65 வயதான ஆணொருவர், கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில், வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.


மரணத்திற்கான காரணம் அதியுயர் இரத்த அழுத்தத்துடன் கொவிட் 19 தொற்றக்குள்ளானமை என அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேநேரம், இரத்மலானையைச் சேர்ந்த 69 வயதுடைய பெண்ணொருவர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் நீரிழிவு நோயில் ஏற்பட்ட சிக்கலான நிலை மற்றும் அதியுயர் இரத்த அழுத்தத்துடன் கொரோனா தொற்றக்குள்ளானமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல கிருலப்பனையைச் சேர்ந்த 71 வயதான பெண்ணொருவரும் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் அதியுயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் கொரோனா தொற்றுக்குள்ளானதினால் அதிகரித்தமை என அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் கொழும்பு 02ஐச் சேர்ந்த 81 வயதான பெண்ணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொரோனா தொற்றக்குள்ளானதுடன் நிமோனியா ஏற்பட்டமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேவேளை, தொமட்டகொடையைச் சேர்ந்த 82 வயதுடைய ஆணொருவர் வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் நீரிழிவு நோயில் சிக்கலான நிலையுடன் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை என அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.