அரசியல் வரலாற்றில் முதற் தடவையாக கணிணியில் அமச்சரவை கூட்டம்!


இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, அமைச்சரவைக் கூட்டம் நேற்று காணொளி மூலம் நடைபெற்றது. 

இதன்போது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்தும் அமைச்சர்கள் தங்களது அலுவலகங்களில் இருந்தும் அமைச்சரவை கூட்டத்தில் பங்குபற்றினர்.

கொவிட் தொற்றுநோய் மட்டுமல்லாமல் செயல்திறன், வசதி, நேரம் மற்றும் செலவை மீதப்படுத்தல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு காணொளி அமைச்சரவைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கும் பயன்படுத்துவதற்கும் அதற்குப் பழக்கப்படுத்துவதற்கும் ஜனாதிபதி அவர்கள் முன்னுரிமை அளித்துள்ளார். இது “சபீட்சத்தின் நோக்கு” கொள்கை பிரகடனத்திலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதைக் கருத்திற் கொண்டு ஜனாதிபதி அண்மையில் தொழில்நுட்ப அமைச்சை தனது கண்காணிப்பின் கீழ் கொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.