ரத்மலானை சர்வதேச விமான நிலையத்தில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்!


 ரத்மலானை சர்வதேச விமான நிலையத்தை முக்கிய ஐந்து துறைகளில் அபிவிருத்தி செய்வதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தற்போது செயற்படுத்தப்பட்டு வருவதாக சுற்றுலாத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, ரத்லாமனை விமான நிலையத்தை தேசிய விமான சேவையின் கேந்திர நிலையமாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ரத்மலானை விமான நிலையத்தை பொழுதுபோக்கு விமான மையமாக உயர்த்தவும் எதிர்பார்ப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுற்றுலாத் தளங்களை ஈர்க்கும் புதிய உள்நாட்டு விமான வழித்தடங்களை கண்டறிந்து கொள்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ரத்மலானை விமான நிலையம் மற்றும் யாழ்ப்பாணம் விமான நிலையம் என்பற்றுக்கு இடையிலான உள்நாட்டு விமான சேவை, கொரோனா தொற்றுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.

எனினும், குறித்த விமான சேவைகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் சுகாதார வழிமுறைகளுடன் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்

Blogger இயக்குவது.