தாமரை தடாகத்தை பார்வையிட வருகிறது சீனா!

 


தாமரை கோபுரம் குறித்த மதிப்பீட்டு அறிக்கையைப் பெற சீன தொழில்நுட்ப குழு வருகிறது.

பூர்த்தி செய்யப்பட்ட கொழும்பு தாமரை கோபுரத்தின் தரத்தை ஆய்வு செய்ய தனி தொழில்நுட்பக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRCSL) தெரிவித்துள்ளது. அத்துடன் சீனாவில் இருந்தும் சிறப்பு தொழில்நுட்ப குழு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் இயக்குநர் ஜெனரல் ஓஷாதா சேனநாயக்க Colombo gazette, இணையத்துக்கு கருத்து தெரிவிக்கையில் தாமரை கோபுரத்தின் சில குறைபாடுகள் மற்றும் லிஃப்ட்டில் உள்ள தொழில்நுட்பக் குறைபாடுகள் குறித்து ஆராய கட்டுமான பொறியாளர்களின் சிறப்பு தொழில்நுட்பக் குழு இம்மாதம் (டிசம்பரில்) பணிகள் தொடங்கும் என்று கூறினார்.


அத்துடன் தாமரை கோபுரம் குறித்த மதிப்பீட்டு அறிக்கையைப் பெற சீனாவிலிருந்து சிறப்பு தொழில்நுட்ப குழுவும் இலங்கைக்கு வரவுள்ளது.

கோபுரத்தினை அமைத்த சீன கட்டுமான நிறுவனம் தாமரை கோபுரத்தை அடுத்த மாதம் அரசிடம் ஒப்படைக்க ஒப்புக் கொண்டுள்ளது, மேலும் அடுத்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் இதை பொதுமக்கள் பார்வையிட திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


கொழும்பு தாமரை கோபுரம் மூலம் இலங்கை தொழில்நுட்பத்தில் சிறந்ததொரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்புவதாகவும், 5 ஜி தொழில்நுட்பத்துடன் பல புதிய அனுபவங்களை அனுபவிக்கும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிடைக்கும் என தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு இயக்குநர் ஜெனரல் ஓஷாதா சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.