யாழ் மாநகர சபையின் பாதீடு தோற்கடிப்பு!


 யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு (பட்ஜெட்) தோற்கடிக்கப்பட்டது.

இந்த பட்ஜெட் மீதான வாக்கெடுப்பு இன்று (02) சபையில் இடம்பெற்ற போது பட்ஜெட்டுக்கு ஆதரவாக 19 வாக்குகளும் எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டது. 2 உறுப்பினர்கள் சபை அமர்பில் கலந்து கொண்டிருக்கவில்லை.

இதன்மூலம் இந்த பட்ஜெட் தோற்கடிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்க்கு எதிராக அகில இலங்கை தமிழ் காங்ரஸ்ஸின் 13 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனனாயக கட்சியின் 10 உறுப்பினர்களும் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்தி கட்சியின் 1 உறுப்பினர் என 24 வாக்களித்துள்ளனனர்.

Blogger இயக்குவது.