வெடிபொருட்கள் மீட்பு! – அரசியல் சதியா?


 தமிழீழ விடுதலை புலிகளை மீள உருவாக்க முயன்றதாக 2014ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட கோபி எனும் பொன்னையா செல்வநாயகம் கஜீபனின் கிளிநொச்சி – இயக்கச்சி, பனிக்கையடி பகுதியில் உள்ள வீட்டில் இன்று (03) பல்வேறு வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் கோபியின் தாய் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் பரந்தன் பகுதியில் பஸ் ஒன்றில் வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டு, அது தொடர்பில் தம்பதி ஒன்றும் கைது செய்யப்பட்டது. அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையை தொடர்ந்து கோபியின் வீட்டில் புதைத்து வைக்கப்பட்ட வெடி பொருட்கள் மீட்கப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது கோபியின் தாயும், மற்றுமொரு வயோதிப பெண்ணும் கைது செய்யப்பட்டனர். இதன்படி தயானுஜன் அம்பிகா (35-வயது), சிங்கராஜா தயானுஜன் (29-வயது), செல்வநாயகம் ராசமலர் (வயது-67), குலசிங்கம் புவனேஸ்வரி (வயது-62) ஆகியோரே கைதாகியுள்ளனர்.

கொரோனா தொற்று மற்றும் மஹர சிறைக் கலவரம், காரணமாக அரசின் மீது பல்வேறு அதிருப்தி ஏற்பட்டுள்ள நிலையில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.