பாதசாரி கடவையை கடக்க முயன்ற சிறுமிகள் பலி!
கொழும்பு – மொரட்டுவை, எகொட உயன பகுதியில் பாதசாரி கடவையை நேற்று (04) இரவு கடக்க முயன்ற இரு சிறுமிகள் விபத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.
வீதியை கடக்க முயன்ற போது இவர்களை மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியது. இதன்போது ஒரு வயது குழந்தையும், 7 வயது சிறுமியும் பலியானதுடன், கர்ப்பிணியான அவர்களது தாய் படுகாயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் குழு ஒன்று ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்ட போது சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை