கிளிநொச்சியில் 2000 குடும்பங்கள் பாதிப்பு!


 சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று (06) 4 மணி வரை 1,926 குடும்பங்களை சேர்ந்த 5,668 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

அத்துடன் 3 வீடு முழுமையாகவும், 276 வீடுகள் பகுதியளவிலும் சேதம்மைந்துள்ளதாக அப்புள்ளி விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை 2 பாதுகாப்பு அமைவிடங்களில் 88 குடும்பங்களை சேர்ந்த 134 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.