அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா!
அமெரிக்காவில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க மாநிலமான கலிபோர்னியாவில் புதிய கட்டுப்பாடுகளுடன் மீண்டும் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் 40 மில்லியன் மக்களில் 85 சதவீதம் பேரை வீட்டிலேயே தங்குவதற்கான உத்தரவு பாதிக்கின்றது.
இது குறைந்தது மூன்று வாரங்களுக்கு கிறிஸ்மஸ் விடுமுறையை உள்ளடக்கி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, பல வணிகங்கள் மூடப்படுவதோடு, மக்கள் தங்கள் வீட்டுக்கு வெளியே யாரையும் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சை பிரிவுகளின் பற்றாக்குறையின் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவு நேற்று ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டு நேரப்படி 11.59 மணிமுதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் கலிபோர்னியாவின் முடக்கத்தின் போது, அனைத்து அத்தியாவசிய வணிகங்களும் மூடப்பட்டன, இது தொற்றுநோயின் தொடக்கத்தில் அமெரிக்காவிற்கு ஒரு ஆரம்ப மாதிரியாகக் காணப்பட்டது.
கொரோனா கண்காணிப்பு திட்டத்தின் படி, நேற்று ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா முழுவதும் 101,487 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை 1,138 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
சமீபத்திய வாரங்களில் நாட்டில் கொரோனா தொற்றும் மற்றும் உயிரிழப்பும் அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 14,756,998 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 282,310 பேர் உயிரிழந்துள்ளதாக ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை