பொலிஸ் அதிகாரிக்கு செருப்பால் அடித்த பெண்!
இளம் பெண்ணொருவரை குடிபோதையில் வந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கடத்த முற்பட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை முகப்பேரைச் சார்ந்த இருபது வயது இளம் பெண் ஒருவர், தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று ஞாயிறன்று இரவு, பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தார்.
இதன்போது அந்த வழியாக குடிபோதையில் தனது மோட்டார் சைக்கிளில் வந்த எம்.ஜி.ஆர். நகர் காவல்நிலைய ஏட்டு ராஜூ என்பவர், தன்னுடன் வாகனத்தில் வருமாறு கட்டாயப்படுத்தி தகராறு செய்துள்ளார். இதனால் தன்னைக் காப்பாற்றுமாறு அந்தப் பெண் கூச்சலிட்டதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் அங்கு விரைந்து வந்து நிலைமையை விசாரித்தனர்.
பின்னர் ஏட்டு ராஜூக்கு செருப்பால் தர்ம அடி கொடுத்து, அவரிடமிருந்து அந்த இளம் பெண்ணை காப்பாற்றி மீட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில், ஏட்டு ராஜூ மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையாளர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை