பாடசாலைகள் நாளை திறக்கப்படும்!


 யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் நாளை (08) முதல் மீள திறக்கப்படும் என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நவம்பர் 24ம் திகதி மூடப்பட்ட கிளிநொச்சி மாவட்டப் பாடசாலைகள் இரண்டு வாரங்களின் பின்னர் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளன. சீரற்ற காலநிலையால் மூடப்பட்ட யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளும் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளன.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் கல்வி அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் பாடசாலைகள் நாளை ஆரம்பிக்க இணக்கம் காணப்பட்டது என்று மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.