அரசியல் கைதிகள் என யாருமில்லை!
இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் யாரும் இல்லை என்று அரசாங்கம் இன்று எகத்தாளமாக பதில் அளித்துள்ளது.
வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பில் பேசிய அமைச்சரவை இணை பேச்சாளர் உதய கம்மன்பில, இலங்கையில் அரசியல் கைதிகள் யாரும் இல்லை என்று கூறினார்.
வடக்கு மற்றும் கிழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் பயங்கரவாத குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் கைதிகளாக கருத முடியாது என்றும் அவர் கூறினார்.
இலங்கையில் உள்ள கைதிகள் அவர்கள் செய்த குற்றங்களின் அடிப்படையில் தண்டிக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்களின் இனத்தின் அடிப்படையில் அல்ல என்றார்.
தண்டனையை குறைக்க அல்லது சில கைதிகளை விடுவிப்பதற்கான அரசாங்கத்தின் திட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து அரசியல் கைதிகள் சேர்க்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்து ஒரு நிருபர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் கமன்பிலா இப்படி எகத்தாளமாக பதிலளித்தார்.
இலங்கையில் உள்ள சிறைகளில் நெரிசலைக் குறைப்பதற்காக, மரண தண்டனை அனுபவிக்கும் கைதிகள் 20 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பின்னர் விடுவிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் நேற்று அறிவித்தது.
இது குறித்து அமைச்சர் கம்மன்பில, சிறைச்சாலைத் துறை அளித்த அறிக்கைகளின் அடிப்படையில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கைதிகளின் தண்டனைகளை மறுஆய்வு செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
இந்த திட்டத்தின் கீழ், கைதிகளின் தண்டனைகள் குறைக்கப்பட்டன அல்லது அவர்கள் விடுவிக்கப்பட்டனர். எவ்வாறாயினும், இந்த திட்டம் முன்னாள் அரசாங்கத்தால் இடைநிறுத்தப்பட்டது, இதன் விளைவாக, தற்போதைய அரசாங்கம் அதை மீண்டும் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.
சிறைத்தண்டனை குறைக்கப்படுவது போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு பொருந்தாது என்றார்.
கருத்துகள் இல்லை