மஹர சிறை மோதலில் உயிரிழந்த 11 கைதிகளில் 9 பேருக்கு கொவிட்19 தொற்றுறுதி!

 


மஹர சிறைச்சாலையின் மோதல் சம்பத்தில் உயிரிழந்த 11 கைதிகளில் 9 பேருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

றாகம மருத்துவமனையின் பணிப்பாளர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

வெலிகடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 112 கைதிகள் மஹர சிறைச்சாலைக்கு அவசரமாக மாற்றப்பட்டமை சிறைச்சாலை மோதலுக்கு காரணம் என பேசப்படுகிறது.

எவ்வித PCR பரிசோதனைகளையும் நடத்தாமல் இந்த கைதிகள் மஹர சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சிறைச்சாலை கொரோனா கொத்தணியில் இறந்த நபர், வெலிகடை சிறைச்சாலையில் இருந்து மஹர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி.

இந்த நிலைமைகளை கவனத்தில் கொண்டு மஹர சிறைச்சாலையில் கடமையாற்றும் அதிகாரிகள் கைதிகளை தூண்டி விட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து ஏற்பட்ட கலவரத்தில் 11 கைதிகள் உயிரிழந்ததுடன், 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.