மணற்காட்டில் சவுக்கு வெட்டிய 13 பேர் கைது!


 அரச காணிக்குள் அத்துமீறியமை, சட்டத்துக்குப் புறம்பாக உள்நுழைந்தமை மற்றும் அரசுக்குச் சொந்தமான சவுக்கு மரத்தை விற்பனை செய்யும் நோக்கோடு வெட்டியமை ஆகிய குற்றச்சாட்டில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் பயன்படுத்திய 3 பட்டா வாகனங்களும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் குறிப்பிட்டனர். இந்தக் கைது நடவடிக்கை இன்று (22) மாலை வடமராட்சி கிழக்கு – மணற்காடு பிரதேசத்தில் இடம்பெற்றது.

சந்தேக நபர்கள் மானிப்பாய், நல்லூர், யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் கூறினர். கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு பாலன்குடில்களை அலங்கரிப்பதற்கு சவுக்கு மரங்கள் வெட்டப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.