கனடாவில் 24 மணித்தியாலத்தில் 6,307பேர் பாதிப்பு!


 கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் கொரோனா தொற்றினால், ஆறாயிரத்து 307பேர் பாதிக்கப்பட்டதுடன் , 114பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 29ஆவது நாடாக விளங்கும் கனடாவில், மூன்று இலட்சத்து 89ஆயிரத்து 775பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இதுவரையிலும் , 12 ஆயிரத்து 325 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் 67 ஆயிரத்து 564பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன் இதில் 530 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மூன்று இலட்சத்து 9ஆயிரத்து 886பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.