சம்பூரில் ஒருவரின் சடலம் மீட்பு


 திருகோணமலை – சம்பூர் பகுதியில் உள்ள வயல் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று (27) மாலை இவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பூர் பகுதியை சேர்ந்த 65 வயதுடைய ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.