மழைநீர் சூழந்து தண்ணீரில் மிதக்கும் 2 ஆயிரம் வீடுகள்!
வங்கக்கடலில் உருவான நிவர் புயல் கடந்த வாரம் புதுச்சேரி – மாமல்லபுரம் இடையே கரையை கடந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த வாரம் இரண்டு நாட்களில் தொடர்ந்து கனமழை பெய்தது.
இதன் காரணமாக சென்னையின் புறநகர் பகுதிகளான செம்பரம்பாக்கம், பூண்டி உள்ளிட்ட ஏரிகளின் நீர்வரத்து அதிகரித்தது.
அத்தோடு 24 அடி உயரம் கொண்ட ஏரியில் 22 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பு அதிகரித்ததால் ஏரியின் பாதுகாப்பு கருதி கடந்த 25ஆம் திகதி செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டது.
6 நாட்களாக திறந்துவிடப்பட்ட உபரிநீர், கடந்த 30-ஆம் திகதி முற்றிலும் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் உருவான ‘புரெவி’ புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
இதனையடுத்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு மீண்டும் நீர் வரத்து அதிகரித்து மீண்டும் நீர் திறந்து விடப்பட்டது.
மேலும் சென்னை புறநகர் பகுதியில் பெய்த கன மழையால் பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி நிரம்பியதால் கோவிலம்பாக்கம் பள்ளிக்கரணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 2ஆயிரம் வீடுகள் மழைநீர் சூழந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
இதானால் கீழ்தளத்தில் தங்கியிருந்த பலரும் வீடுகளை பூட்டிவிட்டு உறவினர் வீடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை