விபத்தில் 2 சிறுவர்கள் பலி தாய் கவலைக்கிடம்!

மொரட்டுவ, எகொட உயன பாதாசாரிகள் கடவையில் இடம்பெற்ற விபத்தில் சிறுவர்கள் இருவர் (ஒரு வயது மற்றும் 7 வயதுடைய ) உயிரிழந்துள்ளதுடன் கர்ப்பிணி தாயார் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த சிறுவர்களின் தாயாரே இவ்வாறு கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதாசாரிகள் கடவையில் பாதையை கடக்க முற்பட்டவர்களை மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.