கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 41,000ஐ கடந்தது!


 நாட்டில் நேற்று மேலும் 549 புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதன் மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 41,439 ஆக உயர்ந்தது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 530 பேர் மினுவாங்கொட- பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள். ஜோர்டானில் இருந்து நாடு திரும்பிய 19 பேரும், கடலோடி ஒருவரும் தொற்றடன் அடையாளம் காணப்பட்டனர்.

நேற்று 520 பேர் குணமடைந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 33,221 ஆக உயர்ந்தது.

தற்போது, 64 வைத்தியசாலைகளில் 8,191 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 614 நபர்கள் கண்காணிப்பில் உள்ளனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.