70 லட்சத்துக்கு ஏலம் போன மோடி ஆடு!


 இந்தியாவில் மார்ச் மாத இறுதியில் இருந்து கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய நிலையில் போக்குவரத்து உள்ளிட்ட சேவைகளும் பல்வேறு தொழில்களும் முடங்கின.

அதில் இருந்து இறைச்சி வியாபாரமும் தப்பவில்லை. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஊரடங்கில் தொடர்ச்சியாக தளர்வுகள் அளிக்கப்பட்டுவருவதால் பல்வேறு தொழில்களும் பழையை நிலையை நோக்கி நகர்ந்துவருகின்றன.

இந்நிலையில் தற்போது இறைச்சிக்கான கால்நடை சந்தைகளும் பழைய நிலைமைக்கு திரும்பியுள்ளன. கால்நடை சந்தையில் விலை அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

அந்தவகையில் மேற்கு மகாராஷ்டிரா பகுதியிலுள்ளது அட்பாடி சந்தை மிகவும் பிரபலம். இந்த சந்தையில் கால்நடை விற்பனை பல லட்சங்களிலும், சில நேரங்களில் கோடியிலும் நடைபெறும் என கூறப்படுகிறது.

இந்த சந்தையில் நேற்று ஏராளமான கால்நடை வளர்ப்பவர்கள் தங்களுடைய ஆடு, மாடு உள்ளிட்டவைகளை விற்பனைக்காக கொண்டுவந்தனர்.

அதன்படி இந்த சந்தையில்,பாபுராவ் மெட்காரி என்பவர் ஒரு ஆட்டுடன் விற்பனைக்கு வந்துள்ளார். மோடி என்ற பெயரிடப்பட்டுள்ள தன்னுடைய ஆட்டை அவர் , 1.5 கோடி ரூபாய்க்கு ஏலத்துக்கு விட்டுள்ளார். எனினும் , அங்கு கூடியிருந்தவர்கள் 70 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் கேட்டுள்ளனர்.

ஆனால், ஆட்டின் விற்பனையாளர் 70 லட்ச ரூபாய் ஆட்டை விற்க முன்வரவில்லை. 1.5 கோடி ரூபாய் கொடுத்தால்தான் விற்பேன் என உறுதியாக தெரிவித்தார். எனினும் அவ்வளவு தொகைக்கு யாரும் அந்த ஆட்டை வாங்கவில்லை என்பதால் அவர் மோடி ஆட்டை திரும்ப கொண்டுச்சென்றதாகவும் கூறப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.