விண்ட்சர்-எசெக்ஸ் மாவட்ட சுகாதாரப் பிரிவு பாடசாலைகள் அனைத்தும் மூடல்!


விண்ட்சர்-எசெக்ஸ் மாவட்ட சுகாதாரப் பிரிவுப் பகுதியிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் மூட சுகாதாரப் பிரிவின் சுகாதார அலுவலர் டாக்டர் வாஜித் அகமது உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் இதன் நீடிப்பு கொவிட் -19 தரவைப் பொறுத்து அமையலாம் எனவும் அவர் விளக்கம் அளித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘வின்ட்சர் மற்றும் எசெக்ஸ் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் டிசம்பர் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை மூடப்படும். இந்த நேரத்தில் மாகாணத்தில் குளிர்கால விடுமுறைகள் தொடங்கும்.

அனைத்து தொடக்க மற்றும் இடைநிலைப் பாடசாலைமாணவர்களும் டிசம்பர் 14ஆம் திகதி முதல் இணைய- தொலைநிலைக் கற்றலுக்கு மாற வேண்டும்.

அனைத்து மாணவர்களுக்கும் பாடசாலைகள் மூடப்படும் அதே வேளையில், ஆசிரியர்கள் மற்றும் முழுநேர தினப்பராமரிப்பு நிலையங்களுக்காக கட்டடங்கள் திறந்திருக்கும்’ என கூறினார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.