சூறாவளி பற்றி சமலின் கருத்து!
புரவி சூறாவளி எதிர்பார்த்ததை விடக் குறைவானது என்றாலும் வடக்கில் 1,009 குடும்பங்களும் திருகோணமலையில் 551 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், வவுனியா, அனுராதபுரம், குருநாகல் ஆகிய மாவட்டங்களும் பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டிருந்தாலும் வடக்கில் மன்னார் மற்றும் முல்லைதிவு மாவட்டங்கள் மற்றும் கிழக்கில் திருகோணமலை மாவட்டங்கள் மட்டுமே புயலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன என கூறினார்.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், தமக்கு குடியித்த தகவல்களின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட 65 குடும்பங்கள் தற்காலிக முகாம்களில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
சூறாவளி இலங்கையிலிருந்து நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று காலை வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதேவேளை சூறாவளி காரணமாக 06 மாவட்டங்களை சேர்ந்த 44 ஆயிரத்து 848 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதன்படி மன்னாரில் 7 ஆயிரத்து 749 பேரும் யாழில் 31 ஆயிரத்து 703 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 789 பேரும் முல்லைத்தீவில் ஆயிரத்து 149 பேரும் வவுனியாவில் 424 பேரும் திருகோணமலையில் 265 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை